உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்  - சீனா கடும் கண்டனம்

February 6, 2023

உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்கா கூறியது. இதனை அடுத்து, அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், சீனாவின் பலூன் சுடப்பட்ட […]

உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்கா கூறியது. இதனை அடுத்து, அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சீனாவின் பலூன் சுடப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் சீன வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு எதிராக கடும் அதிருப்தியையும், தனது எதிர்ப்பையும் வெளிப்படுத்தி உள்ளது. அது மக்களின் பயன்பாட்டுக்கான விண் ஓடம் என்று தெரிவித்து உள்ளது என குளோபல் டைம்ஸ் தகவல் வெளியிட்டு உள்ளது. ஆனால், அமெரிக்காவால் பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது சர்வதேச நடைமுறையை மீறிய செயல் என சீனா கூறியுள்ளது. சட்டப்படி உரிமையை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அதுபற்றிய அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu