உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி மிகக்கடுமையான குறைபாடு -  வடகொரியா

June 19, 2023

உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது மிகக்கடுமையான குறைபாடு என வடகொரியா கருதுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம், தங்கள் நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை தாங்கிய ராக்கெட் ஒன்றை வட கொரியா செலுத்தியது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த ராக்கெட் செயலிழந்தது. அமெரிக்காவையும், தென்கொரியாவையும் உளவு பார்க்கும் முயற்சியாக செயல்பட்ட இந்த ராணுவ […]

உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது மிகக்கடுமையான குறைபாடு என வடகொரியா கருதுகிறது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம், தங்கள் நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை தாங்கிய ராக்கெட் ஒன்றை வட கொரியா செலுத்தியது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த ராக்கெட் செயலிழந்தது. அமெரிக்காவையும், தென்கொரியாவையும் உளவு பார்க்கும் முயற்சியாக செயல்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை தோல்வியடைந்தது.

வட கொரியாவிற்கு இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வடகொரியாவின் உளவுத்துறை, ராக்கெட் தோல்விக்கு காரணம் என்னவென்று கண்டறிவதற்கு சில வாரங்களுக்கு மேல் ஆகலாம் என தெரிவித்திருக்கிறது. அடுத்து ராக்கெட் எப்பொழுது விண்ணில் செலுத்தப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu