பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 குழுக்கள் 210 தனி நபர்களின் சொத்துக்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது.
இது குறித்து அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத நடவடிக்கையில் 15 குழுக்கள் மற்றும் 210 பேர் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து அந்த அமைப்பு மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமான நிதி சொத்துக்கள் உரிய விதிமுறைகளின்படி முடக்கப்பட்டுள்ளன. இந்த முடக்கப்பட்ட குழுக்களில் விடுதலைப்புலிகள், தேசிய தவ்ஹாத் ஜமாத், ஜமாத் இப்ராஹிம் ஆகிய அமைப்புகள் அடங்கும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை போது தேசிய தவ்ஹாத் ஜமாத் அமைப்பு தேவ ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270 க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. இது தவிர தமிழர்கள் மறுவாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, உலக தமிழ் இயக்கம் உலகத் தமிழர் நிவாரண நிதி ஆகியவற்றின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.