இலங்கையில் மகிந்த ராஜபக்சேவை மீண்டும் பிரதமராக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் போராட்டம் வெடித்தது. அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். மேலும் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபராகவும், பிரதமராக தினேஷ் குணவர்தனே உள்ளார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில், மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. இதுகுறித்த கோரிக்கையை அதிபரிடம் இலங்கை பொதுஜன பெரமுனா முன் வைக்கவில்லை என்றார்.