இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு சேவையை தொடங்க இலங்கை அரசு தயாராக உள்ளதாக இலங்கை கப்பல்துறை மந்திரி நிமல்சிரிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே பயணிகள் படகு போக்குவரத்து சேவையை தொடங்க இலங்கை அரசு தயாராக உள்ளதாக அந்நாட்டின் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் துறை மந்திரி நிமல்சிரிபால டிசில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே தொடங்கப்படவிருந்த இத்திட்டத்தில் இந்திய அரசு சில மாற்றங்களை செய்துள்ளதால் படகு போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.