ஐரோப்பிய ஆணையம் நடத்திய விசாரணையின் முடிவில், மெட்டா நிறுவனம் சுமார் 7,120 கோடி ரூபாய் அபராதம் அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு, மார்க் ஜுக்கர்பர்க் மற்றும் அவரது நண்பர்களால் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பேஸ்புக், தற்போது உலகளாவிய சமூக வலைதளமாக பரவியுள்ளது. தற்போதைய மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயக்கப்படுகின்றன. சமீபத்தில், 'பேஸ்புக்' இயக்கும் மெட்டா நிறுவனம், போட்டியாளர்களை ஒடுக்கும் வகையில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டதாக பிரசல்ஸ் நாட்டில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், ஐரோப்பிய ஆணையம் 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் கூட்டு விசாரணை நடத்தியது. அதன் முடிவில், மெட்டா நிறுவனம் 80 கோடி யூரோ (சுமார் 7,120 கோடி ரூபாய்) அபராதம் அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், போட்டியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதை நிரூபிக்க முடியவில்லை என்று மெட்டா தெரிவித்துள்ளது. அதோடு மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளது.