இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கையில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அதிபராக உள்ள அணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, நீதித்துறை மந்திரி விஜயதாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் தங்கள் டெபாசிட் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்தும் அவகாசம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. அவர்களின் வேட்பு மனுக்களை ஏற்பதற்கான காலக்கெடு நேற்று நிறைவடைந்தது. இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 20 பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள், 18 பேர் சுயேச்சை வேட்பாளர்களாவர். இவர்களுடைய மனுக்கள் ஏற்கப்பட்டால் இதுவரை நடந்த அதிபர் தேர்தலிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தல் இதுவாகும்.