இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமர திசநாயகா வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். அப்போது நாடாளுமன்றத்தில் அவரின் கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பான்மை இல்லாததால், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் அடுத்தடுத்த நாடாளுமன்ற தேர்தலை நடத்தத் தீர்மானித்தார். இந்த அறிவிப்பு பிறகு, இலங்கை தேர்தல் கமிஷன் நவம்பர் 14-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவித்தது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது. 225 இடங்களுக்கான இந்த தேர்தலில், 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் பகிர்ந்தளிக்கப்படும். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. இதன் தொடர்ச்சியாக, பல அரசியல் கட்சிகள், தமிழ்க் கட்சிகளும் போட்டியிடுகின்றன.