இந்தியக் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீன்பிடித்தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இந்திய கடலில் ஊடுருவக்கூடாது என்பதற்காக இந்திய கடற்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது இந்திய எல்லையில் […]

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மீன்பிடித்தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இந்திய கடலில் ஊடுருவக்கூடாது என்பதற்காக இந்திய கடற்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களது ஐந்து படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் இந்திய கடற்கரை அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu