இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையிடமிருந்த 234 ஏக்கர் நிலத்தை அப்பகுதி விவசாயிகளுக்கு அந்நாட்டு அதிபர் அணில் விக்ரமசிங்க கொடுத்துள்ளார்.
இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளது. இந்த பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் விக்கிரமசிங்க 408 பயனாளிகளுக்கு இலவச நில பட்டாவை வழங்கினார். பொதுமக்களுக்கு 20 லட்சம் இலவச நில பட்டா வழங்கும் தேசிய உரிமையா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது குறித்து கூறப்படுவதாவது, பாதுகாப்பு படையிடமிருந்த 234 ஏக்கர் இடத்தை 5 கிராம அலுவலர் பிரிவுகளில் வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு அதிபர் ரனில் விடுவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.