இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே அதிரடியாக இலங்கை விளையாட்டு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வெளியேறியது.மேலும் மோசமான ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியதால் இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் அறிவித்தார். இதன் அடிப்படையில் இலங்கை அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்ததை தொடர்ந்து இலங்கை அணியை ஐசிசி அதிரடியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக அடுத்த வருடம் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்தது. இந்நிலையில் தற்போது அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.














