இலங்கை: முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்

September 3, 2022

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு திரும்பியுள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஜூலை 13ம் தேதி, நாட்டில் இருந்து வெளியேறினார். இலங்கையில், அவருக்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வலுவடைந்து, அவரது இல்லம் சூறையாடப்பட்டதை அடுத்து, அவர் மாலத்தீவிற்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர், கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் தங்கி இருந்தார். தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானச் […]

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு திரும்பியுள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஜூலை 13ம் தேதி, நாட்டில் இருந்து வெளியேறினார். இலங்கையில், அவருக்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வலுவடைந்து, அவரது இல்லம் சூறையாடப்பட்டதை அடுத்து, அவர் மாலத்தீவிற்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர், கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் தங்கி இருந்தார். தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானச் சேவைகள் இல்லாததால், அங்கிருந்து முதலில் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். பின்னர், பலத்த பாதுகாப்புக்கு இடையில், நேற்று இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய அவரை, அமைச்சர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தற்போதைய புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர், அவர் பாதுகாப்பு அணிவகுப்புடன் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அவர், கொழும்புவின் விஜயராமா மாவத்தை அருகில் உள்ள அரசாங்க சொகுசு மாளிகையில் தங்குவார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 19ஆம் தேதி, எஸ்எல்பிபி கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் அதிபர் நாட்டிற்கு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர் நாட்டிற்குள் வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தற்போதைய அதிபருக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி, இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கோத்தபய ராஜபக்சே தற்போது இலங்கை திரும்பியுள்ளார். நாட்டு மக்களின் மனநிலை அவருக்கு எதிராக உள்ள நிலையில் அவரது இலங்கை வருகை முக்கியப் பேசு பொருளாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu