இந்தியாவிற்கு வரும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே

July 19, 2023

இலங்கை அதிபர் விக்ரமசிங்கே வரும் ஜூலை 20, 21ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இலங்கையின் நிதி நெருக்கடியால் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய பின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கையின் நிதி நெருக்கடியை சமாளிக்க மற்றும் இலங்கையை மீட்டு எடுக்க இந்திய அரசிடம் இலங்கை அரசு உதவி கேட்டது. இதனால் இந்தியா இலங்கைக்கு பல கோடி ரூபாய் கடன் உதவி மற்றும் எரிபொருள், […]

இலங்கை அதிபர் விக்ரமசிங்கே வரும் ஜூலை 20, 21ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இலங்கையின் நிதி நெருக்கடியால் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய பின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கையின் நிதி நெருக்கடியை சமாளிக்க மற்றும் இலங்கையை மீட்டு எடுக்க இந்திய அரசிடம் இலங்கை அரசு உதவி கேட்டது. இதனால் இந்தியா இலங்கைக்கு பல கோடி ரூபாய் கடன் உதவி மற்றும் எரிபொருள், உணவு பொருள் என பல்வேறு உதவிகளை வழங்கியது.

தற்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இலங்கை அதிபர் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அதிபராக பொறுப்பேற்ற பின் விக்கிரமசிங்கே இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. பயணம் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா இலங்கை சென்று இலங்கை அதிபரின் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.

மேலும் இந்த இரு நாட்டுத் தலைவர்களுக்கான சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பாடு, வர்த்தகம் உட்பட்ட பல்வேறு விவாகரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu