எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி 25-ந்தேதி தொடக்கம்

April 19, 2023

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவு பெற உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் மே 3-ந்தேதி வரை வேலைநாட்களில் நடைபெற […]

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவு பெற உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் மே 3-ந்தேதி வரை வேலைநாட்களில் நடைபெற உள்ளது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண்ணை ஆன்லைன் வாயிலாக வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu