மேலும் ஒரு உக்ரைன் நகரை ரஷ்யா கைப்பற்றியது

October 3, 2024

கிழக்கு உக்ரைனில் உள்ள வூலெடார் நகரத்தை ரஷியாவிடம் இழக்கும் நிலைக்கு உக்ரைன் ராணுவம் வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ரஷிய ராணுவத்துடன் கடுமையாக போராடிய உக்ரைன் படையினர், தற்போது பின்வாங்கி வருகின்றனர். இதன் பின்னணி கோடைக் காலப் போருக்குப் பிறகு கிடைத்த நிலப்பரப்பின் இழப்பாக இருக்கிறது. வூலெடாரில் உள்ள படைப் பிரிவினருக்கு வெளியேற உத்தவிடப்பட்டுள்ளது. அங்கு உள்ள படையினர்களையும் பாதுகாப்புத் தளவாடங்களையும் காப்பாற்றும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் ராணுவத்தின் கோர்டிட்சியா தரைப் படைப்பிரிவு […]

கிழக்கு உக்ரைனில் உள்ள வூலெடார் நகரத்தை ரஷியாவிடம் இழக்கும் நிலைக்கு உக்ரைன் ராணுவம் வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ரஷிய ராணுவத்துடன் கடுமையாக போராடிய உக்ரைன் படையினர், தற்போது பின்வாங்கி வருகின்றனர். இதன் பின்னணி கோடைக் காலப் போருக்குப் பிறகு கிடைத்த நிலப்பரப்பின் இழப்பாக இருக்கிறது. வூலெடாரில் உள்ள படைப் பிரிவினருக்கு வெளியேற உத்தவிடப்பட்டுள்ளது. அங்கு உள்ள படையினர்களையும் பாதுகாப்புத் தளவாடங்களையும் காப்பாற்றும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் ராணுவத்தின் கோர்டிட்சியா தரைப் படைப்பிரிவு டெலிகிராம் மூலம் அறிவித்துள்ளது. வூலெடார் நகரம் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. ரஷியாவிடம் இந்த நகரத்தை இழப்பது உக்ரைன் படையினருக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப் படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu