மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டையில் மூன்று புதிய சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர்கள் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் 7 கோடியே 20 லட்சம் செலவில் மூன்று புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வந்தது. இது தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர், ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழில்பேட்டை வளாகம், மதுரை திருமங்கலம் கப்பலூர் சிப்காட் தொழில்பேட்டை ஆகிய இடங்களில் 3400 மெட்ரிக் டன் எடை அளவு கொண்டதாக கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர். மு க ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதே போல் இரண்டு சேமிப்பு கிடங்குகள் பல்லடம் மற்றும் குனிச்சி ஆகிய இடங்களில் கட்டப்பட உள்ளன. இது கட்டும் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிந்து வேலை காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக முதலில் ஐந்து நபர்களுக்கு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.














