"நலம் காக்கும் ஸ்டாலின்" – தமிழ்நாடு முழுவதும் 1256 சிறப்பு மருத்துவ முகாம்கள் அறிவிப்பு

September 10, 2025

தமிழ்நாட்டின் மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை அருகிலேயே வழங்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்படவுள்ளன என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2021ம் ஆண்டு அமைக்கப்பட்ட திராவிட மாடல் அரசு, “எல்லாருக்கும் எல்லாம்” என்ற கொள்கையின் கீழ் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மருத்துவ சேவைகளை மக்களின் வாசற்படியில் கொண்டு சேர்க்கும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் அறிமுகமாகிறது. ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல், சென்னை செயின்ட் […]

தமிழ்நாட்டின் மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை அருகிலேயே வழங்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்படவுள்ளன என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு அமைக்கப்பட்ட திராவிட மாடல் அரசு, “எல்லாருக்கும் எல்லாம்” என்ற கொள்கையின் கீழ் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மருத்துவ சேவைகளை மக்களின் வாசற்படியில் கொண்டு சேர்க்கும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் அறிமுகமாகிறது. ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல், சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளியில் தொடங்கி, மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 1,256 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஊரகப் பகுதிகள், பழங்குடியினர் குடியிருப்புகள், பின்தங்கிய சமூகங்கள் ஆகியவை முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. ரத்தப் பரிசோதனைகள், புற்றுநோய் கண்டறிதல், இதய மற்றும் நரம்பியல் பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளன. அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ள இந்த முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu