தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது.
2001ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. இந்நிலையில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் நிறைவேறி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது. அதன்படி 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 200 ரூபாயாகவும் உயருகிறது. ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கான சட்டமசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.