இரவு நேர வானத்தை ஒளியூட்டும் வகையில், நட்சத்திர வெடிப்பு ஒன்று நிகழ உள்ளது. துருவ நட்சத்திரத்தை விட அதிக ஒளி கொண்டதாகவும், வெறும் கண்களால் பார்க்கக் கூடிய வகையிலும் இது தென்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நம் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நம்மால் பார்க்க முடியும் வகையில் இந்த நட்சத்திர வெடிப்பு இருக்கும் என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பூமியிலிருந்து 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில், Corona Borealis என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டம் உள்ளது. T Coronae Borealis என்று அழைக்கப்படும் விண்மீன் ஒன்று விரைவில் வெடித்துச் சிதற உள்ளது. துல்லியமாக இது எப்போது நிகழும் என்பதை சொல்ல முடியாது. செப்டம்பர் மாதத்துக்கு முன்பு நிகழ்ந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கி உதவியால் மட்டுமே காணக்கூடிய இந்த நட்சத்திரத்தை வெடிப்பு நேரும் போது வெறும் கண்களாலேயே காண முடியும். - இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.