ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 74% உயர்வு

January 21, 2023

வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு நிகர லாபம் 74% உயர்ந்து, 1421 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 38% உயர்ந்து, 17481 கோடியாக பதிவாகியுள்ளது. ஸ்டார் நிறுவனத்தின் சார்பாக இயக்கப்படும் டிவி சேனல்கள், ஓடிடி தளங்கள் இந்தியாவின் அனேக பிராந்திய மொழிகளில் முன்னிலையில் உள்ளன. எனவே, நிறுவனத்திற்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் டிஜிட்டல் சந்தாதாரர் எண்ணிக்கை ஆகியவை உயர்ந்துள்ளது. ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் […]

வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு நிகர லாபம் 74% உயர்ந்து, 1421 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 38% உயர்ந்து, 17481 கோடியாக பதிவாகியுள்ளது.

ஸ்டார் நிறுவனத்தின் சார்பாக இயக்கப்படும் டிவி சேனல்கள், ஓடிடி தளங்கள் இந்தியாவின் அனேக பிராந்திய மொழிகளில் முன்னிலையில் உள்ளன. எனவே, நிறுவனத்திற்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் டிஜிட்டல் சந்தாதாரர் எண்ணிக்கை ஆகியவை உயர்ந்துள்ளது.

ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 57% உயர்ந்து, 10496 கோடியாக உள்ளது. மேலும், டிஜிட்டல் சந்தா கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 11% உயர்ந்து, 6130 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒளிபரப்பு உரிமங்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் 77% உயர்ந்து, 830 கோடியாக உள்ளது. அத்துடன், திரைப்படங்களை தியேட்டர்களுக்கு விநியோகம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்து, 26 கோடியாக உள்ளது. அதே வேளையில், செலவினங்கள் 41% உயர்ந்து, 15653 கோடியாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu