ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இந்தியர் லக்ஷ்மண் நரசிம்மன் நியமனம்

September 2, 2022

பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக லக்ஷ்மண் நரசிம்மன் என்ற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். புனே பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டப்படிப்பு படித்துள்ள லக்ஷ்மண் நரசிம்மன், இங்கிலாந்தைச் சேர்ந்த பன்னாட்டு நுகர்வோர் சுகாதார நிறுவனமான ரெக்கிட் பென்கிசரில் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். முன்னதாக அவர், பெப்சிகோ நிறுவனத்தில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகுத்துள்ளார். அதற்கு முன்னர், மெக்கன்சி அண்ட் கம்பெனி நிறுவனத்தின் மூத்த பங்குதாரராகவும் இருந்துள்ளார். தற்போது, லண்டனில் வசிக்கும் அவர், […]

பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக லக்ஷ்மண் நரசிம்மன் என்ற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புனே பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டப்படிப்பு படித்துள்ள லக்ஷ்மண் நரசிம்மன், இங்கிலாந்தைச் சேர்ந்த பன்னாட்டு நுகர்வோர் சுகாதார நிறுவனமான ரெக்கிட் பென்கிசரில் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். முன்னதாக அவர், பெப்சிகோ நிறுவனத்தில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகுத்துள்ளார். அதற்கு முன்னர், மெக்கன்சி அண்ட் கம்பெனி நிறுவனத்தின் மூத்த பங்குதாரராகவும் இருந்துள்ளார். தற்போது, லண்டனில் வசிக்கும் அவர், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சியாட்டில் நகர கிளைக்கு அக்டோபர் மாதம் செல்ல உள்ளார். அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலராக இணையவருக்கும் லட்சுமணன், ஏப்ரல் மாதம் முதல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் தலைமை பொறுப்பை ஏற்கும் வரையில், ஹோவர்ட் ஷூல்ட்ஸ் இடைக்கால தலைமைச் செயலராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மண் நரசிம்மனுக்கு, சுமார் 13 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என்றும், 200% சம்பளப் பணம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை தலைமைப் பொறுப்பில் நியமிப்பது பல வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சத்யா நாதெள்ளா, அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயணன், கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, ட்விட்டர் நிறுவனத்தில் பராக் அகர்வால், ஐபிஎம் நிறுவனத்தில் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய இந்தியர்கள் தலைமை பொறுப்பை அலங்கரித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது லக்ஷ்மண் நரசிம்மனும் இணைய உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu