புதிதாக நியமிக்கப்பட்ட ஸ்டார்பக்ஸ் தலைமைச் செயல் அதிகாரி பிரையன் நிக்கோல், நிறுவனத்தின் சீயாட்டில் தலைமையகத்திற்கு இடம்பெயர போவதில்லை. மாறாக, வாரத்திற்கு 3 முறை. நிறுவன ஜெட் மூலம் தனது கலிபோர்னியா வீட்டிலிருந்து பயணம் செய்வார் என்று SEC தாக்கல் மூலம் தெரிய வந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை வலியுறுத்தி வரும் ஸ்டார்பக்ஸ் -ன் இந்த ஏற்பாட்டுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆண்டுக்கு $1.6 மில்லியன் சம்பளம் வாங்கும் நிக்கோலுக்கு இத்தகைய ஏற்பாடு செய்யப்படுவதை ஸ்டார்பக்ஸ் ஆதரித்து பேசியுள்ளது. குறிப்பாக, நிக்கோல் முதன்மையாக சீயாட்டில் அலுவலகத்தில் இருந்து தான் பணிபுரிவார். மற்ற அலுவலக இடங்களை பார்வையிடுவார் என்று கூறியுள்ளது. ஆனால், சுமார் 1600 கிலோமீட்டர் தொலைவிலான அவரது பயணத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, பொதுமக்கள் இடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.