உக்ரைனில் உள்ள ஸ்டார்லிங் அமெரிக்காவிடமிருந்து எந்த நிதியுதவியும் பெறவில்லை - எலோன் மஸ்க்

October 19, 2022

உக்ரைனில் உள்ள ஸ்டார்லிங்க் இணைய சேவை அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெறவில்லை என்று டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தெரிவித்தார். உக்ரைனில் உள்ள மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்பிற்கு பணம் செலுத்த பென்டகன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இது குறித்து மஸ்க் கூறுகையில் தனது ராக்கெட் நிறுவனமான SpaceX, செலுத்தப்படாத சேவை மற்றும் சைபர்வேர் பாதுகாப்பிற்கான மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான செலவுகள் காரணமாக மாதத்திற்கு சுமார் 20 […]

உக்ரைனில் உள்ள ஸ்டார்லிங்க் இணைய சேவை அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெறவில்லை என்று டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தெரிவித்தார்.

உக்ரைனில் உள்ள மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்பிற்கு பணம் செலுத்த பென்டகன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இது குறித்து மஸ்க் கூறுகையில் தனது ராக்கெட் நிறுவனமான SpaceX, செலுத்தப்படாத சேவை மற்றும் சைபர்வேர் பாதுகாப்பிற்கான மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான செலவுகள் காரணமாக மாதத்திற்கு சுமார் 20 மில்லியன் டாலர்கள் இழப்பதாகக் கூறினார். இருப்பினும், தொடர்ந்து இணைய சேவை செய்வோம் என்றும் கூறினார்.

முன்னதாக ஸ்டார்லிங்க்கின் செயல்பாடுகள் நிதி ரீதியாக சாத்தியமற்றதாகி வருவதாக மஸ்க் கூறியதாக சிஎன்என் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார். சிஎன்என் அறிக்கையின்படி, மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் கடந்த மாதம் பென்டகனுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உக்ரைனுக்கு மேலும் டெர்மினல்களை நன்கொடையாக வழங்கவோ அல்லது தற்போதுள்ள டெர்மினல்களுக்கு நிதியளிக்கவோ முடியாத நிலையில் உள்ளதாக கூறியது. இருப்பினும், தான் நல்ல செயல்களின் தேவையை உணர்ந்துள்ளதால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் ஸ்பேஸ்எக்ஸ் சேவைகளுக்கு நிதியளிக்கப் போவதாக மஸ்க் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu