இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஸ்டார்லிங்க் விரைவில் இணையவுள்ளது.
இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஸ்டார்லிங்க் விரைவில் இணையவுள்ளது. மத்திய அரசு, இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகள் வழங்குவதற்கான GMPCS உரிமத்தை தரும் போது, பயனர்களின் தரவுகளை இந்தியாவில் சேமிக்கவும், தேவையான போது புலனாய்வு அமைப்புகளுக்கு அணுகல் வழங்கவும் என்ற நிபந்தனைகள் விதித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகள் தொடங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டவர் பயன்பாடு குறைந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியின்மை ஏற்படலாம்.














