ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி விண்கலத்தின் ஐந்தாவது சோதனை ஏவுதல் அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான FAA-வின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கும் இந்த ஏவுதல், முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நவம்பர் மாதத்தை விட மிகவும் விரைவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை ஏவுதலின் முக்கிய நோக்கம், ஸ்டார்ஷிப் விண்கலத்தை பூமிக்கு திரும்பக் கொண்டு வந்து, அதை மீண்டும் பயன்படுத்துவதற்கான முதல் முயற்சியாகும். டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸில் இருந்து ஏவப்படும் சூப்பர் ஹெவி பூஸ்டர், பூமியைச் சுற்றி வந்துவிட்டு மீண்டும் ஸ்டார்பேஸில் தரையிறங்கும். அதேசமயம், ஸ்டார்ஷிப் விண்கலம் இந்தியப் பெருங்கடலில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தண்ணீரில் இறங்கும். இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில், ஸ்பேஸ் எக்ஸின் நிலவு மற்றும் செவ்வாய் திட்டங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.