இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 3 பில்லியன் டாலர்கள் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பத்திரங்கள் டாலர்களில் வெளியிடப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. பல்வேறு கட்டங்களாக பத்திர வெளியீடு நடைபெற்று நிதி திரட்டப்படும் என கூறப்படுகிறது. திரட்டப்படும் நிதி, வங்கியின் நடப்பு நிதியாண்டு செயல்பாடுகளுக்காக செலவிடப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான செயல்பாடுகளுக்காக, பல்வேறு வங்கிகள் கடன் பத்திர வெளியீட்டை அறிவித்துள்ளன. கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றின் வரிசையில் பாரத ஸ்டேட் வங்கி இணைந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கடன் பத்திர வெளியீட்டுக்கான ஒப்புதலை வழங்கி உள்ளனர்.