விரைவில் மாநில கல்வி கொள்கை வெளியீடு: அமைச்சர் பொன்முடி தகவல்

September 7, 2022

விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களும் தங்கள் துறை சார்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண்டியது அவசியமாகும். அதோடு மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு […]

விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களும் தங்கள் துறை சார்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண்டியது அவசியமாகும். அதோடு மாணவர்களுக்கு முறையான கல்வி வழங்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில், அவற்றில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் உள்ளன. தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதுமானது. மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் அமலில் உள்ளது.

மருத்துவர்கள் தனியே தொழில் தொடங்குவதுபோல, பொறியாளர் உள்ளிட்டோரும் தொழில்முனைவோராக மாற வேண்டும். அதற்கேற்ப மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு பதிவுசெயப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu