காசாவில் இஸ்ரேல் படை பயன்படுத்தி வரும் நாசக்கார ஆயுதங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் கோல்கர் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது, இஸ்ரேல் ராணுவம் காஜாவில் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கூட அதிக நாசத்தை உண்டு பண்ணக்கூடிய ஏவுகணைகளை வீசிக்கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டு மனித அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் பயன்படுத்தும் நாசக்கார ஆயுதங்கள் குறித்து அந்நாட்டை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்கள் மீது இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துவது போர் சட்டங்களுக்கு எதிரானது. இதையே காரணம் காட்டி பொதுமக்கள் படுகொலையை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. இதனை ஏற்க முடியாது என்றார்.














