ஒரே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் இழந்த சென்செக்ஸ் - பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

July 21, 2023

கடந்த சில தினங்களாக தொடர் உச்சங்களை பதிவு செய்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று ஒரே நாளில் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், தொடர் உச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தின்போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1000 புள்ளிகள் வரை சரிவடைந்தது. இறுதியாக, வர்த்தக நேர முடிவில், 887.64 புள்ளிகள் சரிந்து 66684.26 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவு பெற்றுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு […]

கடந்த சில தினங்களாக தொடர் உச்சங்களை பதிவு செய்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று ஒரே நாளில் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், தொடர் உச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தின்போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1000 புள்ளிகள் வரை சரிவடைந்தது. இறுதியாக, வர்த்தக நேர முடிவில், 887.64 புள்ளிகள் சரிந்து 66684.26 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவு பெற்றுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 234.15 புள்ளிகளை இழந்து, 19745 புள்ளிகளாக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியான பின்னர், அந்த நிறுவனத்தின் பங்குகள் 9% வரை சரிவடைந்தன. டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச் சி எல் டெக், ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இன்று சரிவடைந்துள்ளன. அதே வேளையில், எல் அண்ட் டி, ஓ என் ஜி சி, எஸ் பி ஐ, என் டி பி சி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை ஏற்றமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu