ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் குழுமத்தின் தலைமை கார்ப்பரேட் அதிகாரி கே எஸ் ராவ் ராஜினாமா

December 9, 2022

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் குழுமத்தின் தலைமை கார்ப்பரேட் அதிகாரியாக இருந்த கே எஸ் ராவ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 15ஆம் தேதி, இவரது இறுதி பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பதவியில் இருந்து […]

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் குழுமத்தின் தலைமை கார்ப்பரேட் அதிகாரியாக இருந்த கே எஸ் ராவ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 15ஆம் தேதி, இவரது இறுதி பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பதவியில் இருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக, தலைமை செயல் அதிகாரி ஆனந்த் அகர்வால், தலைமை நிதி அதிகாரி மிஹிர் மோடி ஆகியோர் பதவியிலிருந்து விலகினர். அவர்களைத் தொடர்ந்து, கே எஸ் ராவ் பதவி விலகியுள்ளார். இந்நிலையில், நிறுவனத்தின் புதிய நிதி அதிகாரியாக துஷார் ஷ்ரோப் நியமிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu