தொடர்ந்து 3வது நாளாக இந்திய பங்குச் சந்தையில் சரிவு காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 456.1 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 124.6 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் முடிவில், சென்செக்ஸ் 72943.68 புள்ளிகளிலும், நிஃப்டி 22147.9 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஈச்சர் மோட்டார்ஸ், டேவிஸ் லேப்ஸ், டைட்டன், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, டாக்டர் ரெட்டீஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், இன்போசிஸ், இன்டஸ் இன்ட் வங்கி, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, விப்ரோ, பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக், பாரதி ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹிந்தால்கோ, டாடா ஸ்டீல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.














