இன்றைய வர்த்தக நாளின் நிறைவில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி பங்குச்சந்தை நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 33.49 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 76456.59 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 5.65 புள்ளிகள் உயர்ந்து 23264.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஓஎன்ஜிசி, எல் அண்ட் டி, அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பி பி சி எல், அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், கோட்டக் வங்கி, டேவிஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டிஸ், ரிலையன்ஸ், ஐடிசி, சன் பார்மா, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.