காலாண்டு முடிவுகள் எதிரொலி - பங்குச் சந்தையில் ஏற்றம்

October 18, 2024

நெஸ்லே, விப்ரோ மற்றும் டாடா குழும நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த சூழல் இந்திய பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் விளைவாக இன்று இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 218.14 புள்ளிகள் உயர்ந்து 81224.75 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 104.21 புள்ளிகள் உயர்ந்து 24854.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, ஐஷர் […]

நெஸ்லே, விப்ரோ மற்றும் டாடா குழும நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த சூழல் இந்திய பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் விளைவாக இன்று இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 218.14 புள்ளிகள் உயர்ந்து 81224.75 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 104.21 புள்ளிகள் உயர்ந்து 24854.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, ஐஷர் மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிக லாபத்தைப் பெற்றன. அதேசமயம், இன்ஃபோசிஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, எச்யுஎல் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தன. துறைகளைப் பொறுத்தவரை, வங்கி மற்றும் உலோகம் துறைகள் தலா 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து சிறப்பாக செயல்பட்டன. ஆனால், ஐடி துறை 1 சதவீதத்திற்கும், எஃப்எம்சிஜி துறை 0.5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து காணப்பட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu