இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று,இந்திய பங்குச் சந்தை ஏற்றம் பெற்று புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 145.52 புள்ளிகள் உயர்ந்து, 80664.86 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 84.55 புள்ளிகள் உயர்ந்து, 24586.7 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ டி பி ஐ வங்கி, எஸ் வங்கி, வோடபோன், பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பாரத ஸ்டேட் வங்கி, எச் சி எல் டெக், ஜொமாட்டோ, ஓ என் ஜி சி போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில், அதானி பவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரயில் விகாஸ் நிகாம், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்றவை வீழ்ச்சி அடைந்துள்ளன.