இந்திய பங்குச்சந்தை இன்று பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை சிறிய அளவிலான சரிவில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 79441.45 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 24123.85 புள்ளிகளிலும் நிறைவு பெற்றுள்ளன.
இன்றைய வர்த்தகத்தில், இன்போசிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஜொமாட்டோ, ஜேகே பேப்பர், எல் அண்ட் டி போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஐடிசி, அதானி பவர், டாடா மோட்டார்ஸ், மோதிலால் ஓஸ்வால், வோடபோன், ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கோட்டக் வங்கி, எஸ் வங்கி, ஐ டி எப் சி பர்ஸ்ட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை சரிவடைந்துள்ளன.














