இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 667.55 புள்ளிகள் சரிந்து 74502.9 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 183.46 புள்ளிகள் சரிந்து 22704.7 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி லைஃப், எஸ் பி ஐ லைஃப், டாடா கன்ஸ்யூமர், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இன்போசிஸ், ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. அதே வேளையில், ஹிண்டால்கோ, பவர் கிரிட், டேவிஸ் லேப்ஸ், சன் பார்மா, சிப்லா, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன.