2022 ன் இறுதி வர்த்தக நாளில், 4.4% லாபத்துடன் பங்குச்சந்தை நிறைவு

December 30, 2022

2022 ஆம் ஆண்டின் இறுதி வர்த்தக நாளான இன்று, பங்குச்சந்தை 4.4% லாபத்துடன் நிறைவடைந்துள்ளது. இந்த வருடத்தில் உக்ரைன்- ரஷ்யா போர், உலகளாவிய பொருளாதார மன்ற நிலை, அதிகரித்து வந்த சர்வதேச பணவீக்கம் உள்ளிட்ட பல ஏற்ற இறக்கங்களை இந்திய பங்குச் சந்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டில், இந்தியா மட்டுமின்றி, உலகளாவிய முறையில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்த வருடத்தின் இறுதி வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு […]

2022 ஆம் ஆண்டின் இறுதி வர்த்தக நாளான இன்று, பங்குச்சந்தை 4.4% லாபத்துடன் நிறைவடைந்துள்ளது. இந்த வருடத்தில் உக்ரைன்- ரஷ்யா போர், உலகளாவிய பொருளாதார மன்ற நிலை, அதிகரித்து வந்த சர்வதேச பணவீக்கம் உள்ளிட்ட பல ஏற்ற இறக்கங்களை இந்திய பங்குச் சந்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டில், இந்தியா மட்டுமின்றி, உலகளாவிய முறையில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.

இந்த வருடத்தின் இறுதி வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 293.14 புள்ளிகள் குறைந்து, 60840.74 ஆக நிலை கொண்டது. இது 4.4% லாபத்தை பதிவு செய்துள்ளது. ஆனால், கடந்த 3 வருடங்களாக இரட்டை இலக்க வளர்ச்சி பதிவானது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 85.70 புள்ளிகள் குறைந்து, 18105.30 ஆக நிலை கொண்டது. இது 4.3% லாப உயர்வை பதிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu