கருத்துக்கணிப்பு முடிவுகளால் வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை

June 3, 2024

இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் எதிரொலியாக, இன்றைய பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 3.4% அளவுக்கு பங்குச் சந்தை புள்ளிகள் உயர்ந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 2507.47 புள்ளிகள் உயர்ந்து 76468.78 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 733.21 புள்ளிகள் உயர்ந்து 23263.9 புள்ளிகளில் […]

இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் எதிரொலியாக, இன்றைய பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 3.4% அளவுக்கு பங்குச் சந்தை புள்ளிகள் உயர்ந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 2507.47 புள்ளிகள் உயர்ந்து 76468.78 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 733.21 புள்ளிகள் உயர்ந்து 23263.9 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று காணப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தால் முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடி அளவில் லாபம் கிடைத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பாஜக ஆதரவு பெற்ற பங்குகள் என கருதப்படும் பங்குகள் மிகப்பெரிய ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், என்டிபிசி, பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், ஓஎன்ஜிசி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா ஸ்டீல், எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. ஈச்சர் மோட்டார்ஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ, ஹெச் சி எல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் ஃபார்மா, பிரிட்டானியா, டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu