சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை

February 29, 2024

நேற்றைய வர்த்தக நாளில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, இன்று சரிவிலிருந்து மீண்டெழுந்துள்ளது. இன்று முழுவதும் ஏற்ற இறக்கப் பாதையில் பயணித்த பங்குச்சந்தை, 0.2% வளர்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 195.42 புள்ளிகள் உயர்ந்து, 72500.3 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 31.65 புள்ளிகள் உயர்ந்து 21982.8 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது இன்றைய வர்த்தகத்தில், அதானி […]

நேற்றைய வர்த்தக நாளில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, இன்று சரிவிலிருந்து மீண்டெழுந்துள்ளது. இன்று முழுவதும் ஏற்ற இறக்கப் பாதையில் பயணித்த பங்குச்சந்தை, 0.2% வளர்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 195.42 புள்ளிகள் உயர்ந்து, 72500.3 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 31.65 புள்ளிகள் உயர்ந்து 21982.8 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது

இன்றைய வர்த்தகத்தில், அதானி எண்டர்பிரைசஸ், டாடா கன்ஸ்யூமர், இண்டஸ் இண்ட் வங்கி, அதானி போர்ட்ஸ், மஹிந்திரா, பிரிட்டானியா, மாருதி சுசுகி, பவர் கிரிட், டாடா ஸ்டீல், ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஆட்டோ, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, ஈச்சர் மோட்டார்ஸ், யு பி எல், டெக் மஹிந்திரா, பிபிசிஎல், ஹெச் டி எஃப் சி வங்கி, ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, டிசிஎஸ், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu