2025-26 நிதியாண்டின் முதல் வர்த்தக நாள் பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது.
2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாள் பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது. இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் காணப்பட்டது.
காலை 10.30 மணியளவில் நிப்டி 23,292.25 புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் 76,511.96 புள்ளிகளுக்கும் சரிவை கண்டது. மதியம் 12.15 மணிக்கு நிப்டி 23,240 புள்ளியாகவும், சென்செக்ஸ் 76,269 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை சந்தித்தது.