பங்குச் சந்தை புள்ளிகள் ஒரே நாளில் 1% வீழ்ச்சி

இந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்றம் பெற்று வந்த இந்திய பங்குச்சந்தை இன்று இறக்கத்தை பதிவு செய்துள்ளது. இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 1% அளவுக்கு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 732.96 புள்ளிகள் சரிந்து 73878.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 172.36 புள்ளிகள் சரிந்து 22475.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, கோல் இந்தியா, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டிஸ், ஹிண்டால்கோ, […]

இந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்றம் பெற்று வந்த இந்திய பங்குச்சந்தை இன்று இறக்கத்தை பதிவு செய்துள்ளது. இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 1% அளவுக்கு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 732.96 புள்ளிகள் சரிந்து 73878.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 172.36 புள்ளிகள் சரிந்து 22475.85 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, கோல் இந்தியா, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டிஸ், ஹிண்டால்கோ, அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் பின்சர்வ், பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், எல் அண்ட் டி, மாருதி சுசுகி, நெஸ்லே, ரிலையன்ஸ், ஏர்டெல், எச்டிஎப்சி லைஃப், கோட்டக் வங்கி, டாடா ஸ்டீல், ஐடிசி, பவர் கிரிட், என் டி பி சி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu