நேற்றைய வர்த்தக நாளில் 2% உயர்வை பதிவு செய்த இந்திய பங்குச்சந்தை, இன்று 1% சரிவை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 801.67 புள்ளிகள் சரிந்து, 71139.9 புள்ளிகளில் நிலைபெற்று உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 215.5 புள்ளிகள் சரிந்து 21522.1 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ், ஐடிசி ஆகிய முக்கிய நிறுவனங்கள் கடும் சரிவை பதிவு செய்துள்ளன. உச்சபட்சமாக, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 5% க்கும் மேலாக சரிந்துள்ளது. மேலும், டைட்டன், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், என் டி பி சி, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களும் இன்று சரிவடைந்துள்ளன. அதே சமயத்தில், பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன.