தைவானை மிரட்டுவதை நிறுத்துங்கள் - தைவான் அதிபர் வில்லியம் லாய்

May 21, 2024

சீனா தைவானை மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்று தைவானின் புதிய அதிபர் வில்லியம் லாய் எச்சரித்துள்ளார். தைவானின் புதிய அதிபராக வில்லியம் ராய் நேற்று பதவி ஏற்றார். இவருக்கான பதவியேற்பு விழா தைப்பை நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. சீனா தைவானை நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. அதோடு கடந்த சில காலமாகவே தைவானுக்கு ராணுவ ரீதியாக சீனா அச்சுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் தைவானின் புதிய அதிபராக வில்லியம் ராய் பதவியேற்றுள்ளார். […]

சீனா தைவானை மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்று தைவானின் புதிய அதிபர் வில்லியம் லாய் எச்சரித்துள்ளார்.

தைவானின் புதிய அதிபராக வில்லியம் ராய் நேற்று பதவி ஏற்றார். இவருக்கான பதவியேற்பு விழா தைப்பை நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. சீனா தைவானை நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. அதோடு கடந்த சில காலமாகவே தைவானுக்கு ராணுவ ரீதியாக சீனா அச்சுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் தைவானின் புதிய அதிபராக வில்லியம் ராய் பதவியேற்றுள்ளார். இவருக்கு வயது 64. இவர் சீனாவுக்கு எதிரானவராக கருதப்படுகிறார். சீனாவும் இவரை ஒரு பிரிவினைவாதி என்று விமர்சனம் செய்துள்ளது.

இந்நிலையில், நேற்று பதவி ஏற்பு விழாவில் வில்லியம் லாய் பேசும்போது, சீனா தைவானை மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். அதோடு தைவானின் ஜனநாயகத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சீனாவின் அச்சுறுத்தலை கண்டு தைவான் பயப்படாது என்றும் கூறினார். தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu