புயல் பாதித்த மாவட்டங்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்

December 7, 2023

புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களில் டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மாத மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை […]

புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களில் டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மாத மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து டிசம்பர் 18 ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu