அமெரிக்காவில் மாணவர் விசா விதிகளில் கடும் கட்டுப்பாடு

August 29, 2025

டிரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறைகள் – இந்திய மாணவர்களுக்கு பெரும் சவால். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், குடியேற்ற கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் படிக்கவும் வேலை செய்யவும் விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விசா விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்த புதிய விதிப்படி, சர்வதேச மாணவர் விசா (F) மற்றும் கலாச்சார பரிமாற்ற திட்ட (J) விசாவிற்கு இனி அதிகபட்சம் 4 ஆண்டுகள் […]

டிரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறைகள் – இந்திய மாணவர்களுக்கு பெரும் சவால்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், குடியேற்ற கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் படிக்கவும் வேலை செய்யவும் விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விசா விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்த புதிய விதிப்படி, சர்வதேச மாணவர் விசா (F) மற்றும் கலாச்சார பரிமாற்ற திட்ட (J) விசாவிற்கு இனி அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும். இதற்குப் பிறகு நீட்டிப்பு பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், படிப்பு முடிந்த பிறகு வேலை தேடுவதற்கான 60 நாட்கள் அவகாசம் 30 நாட்களாக குறைக்கப்படுகிறது. மேலும், முதுகலைப் படிப்பில் பாடப்பிரிவை மாற்றும் வாய்ப்புகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுக்கான விசா 240 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவை கல்வி மையமாகத் தேர்வு செய்யும் இந்திய மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu