அக்டோபர் 28 முதல் வேலைநிறுத்தம்: பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

October 13, 2022

அக்டோபர் 28 முதல் காலவரையற்ற பால் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. சேலத்தில் நேற்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம், தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. அப்போது பேசிய அவர், ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டர், 31 - 41 ரூபாய்; எருமைப் பால் லிட்டர், 41 - 51 ரூபாயாகவும் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும். இந்த விலை […]

அக்டோபர் 28 முதல் காலவரையற்ற பால் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

சேலத்தில் நேற்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம், தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. அப்போது பேசிய அவர், ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டர், 31 - 41 ரூபாய்; எருமைப் பால் லிட்டர், 41 - 51 ரூபாயாகவும் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும். இந்த விலை உயர்வை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அக்.17ம் தேதி முதல் 20 வரை சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகங்கள் முன் மாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் போராட்டத்துக்கு பின் அரசு எங்களை அழைத்து பேசி பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இல்லையெனில், அக்டோபர் 28 முதல் காலவரையற்ற பால் கொள்முதல் நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu