மத்திய ரிசர்வ் வங்கியின் வருவாய் 2.35 லட்சம் கோடியாக உயர்வு

May 31, 2023

கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், மத்திய ரிசர்வ் வங்கியின் வருவாய் 47% உயர்ந்து, 2.35 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், அந்நிய செலாவணி வருவாய் அதிகமாக இருந்தது. குறிப்பாக, முந்தைய ஆண்டை விட 1.6 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஈட்டப்பட்டது. அதன் விளைவாக, அந்நிய நாணய பரிவர்த்தனையில் 50% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசாங்கத்திற்கு 87416 கோடி ரூபாய் ஈவுத்தொகையாக கிடைத்துள்ளது. அந்நிய நாணய பரிவர்த்தனைகள் மதிப்பு 1.03 […]

கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், மத்திய ரிசர்வ் வங்கியின் வருவாய் 47% உயர்ந்து, 2.35 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், அந்நிய செலாவணி வருவாய் அதிகமாக இருந்தது. குறிப்பாக, முந்தைய ஆண்டை விட 1.6 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஈட்டப்பட்டது. அதன் விளைவாக, அந்நிய நாணய பரிவர்த்தனையில் 50% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசாங்கத்திற்கு 87416 கோடி ரூபாய் ஈவுத்தொகையாக கிடைத்துள்ளது. அந்நிய நாணய பரிவர்த்தனைகள் மதிப்பு 1.03 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், மத்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் வெளிநாட்டு நாணய விற்பனை, 2023 ஆம் நிதி ஆண்டில், 213 பில்லியன் டாலர்கள் மதிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2022-ம் நிதி ஆண்டை விட இரண்டு மடங்கு உயர்வாகும். இதுவே, மத்திய அரசு வங்கியின் வருவாய் உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu