நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக குறைந்து வருவதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 14.72 லட்சம் பள்ளிகள் உள்ளன. இதில் 10.21 லட்சம் பள்ளிகள் அரசு பள்ளிகளாகும். மொத்தம் 24.8 கோடி மாணவர்களில் 12.75 கோடி பேர் அரசு பள்ளிகளில் கல்வி பெறுகின்றனர். ஆனால் 2021–22ஆம் ஆண்டில் 14.32 கோடி மாணவர்கள் இருந்த நிலையில், தற்போது 1.54 கோடி பேர் குறைந்து 12.78 கோடியாகியுள்ளது. பீகார் அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்க, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் 2-வது இடத்தில் உள்ளன. தமிழகம் 10-வது இடத்தில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது.