கடலூர் அருகே பள்ளி வேனை ரெயில் மோதி நிகழ்ந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மீது ரெயில் மோதி நடந்த சோகமான விபத்தில், 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைக் தொடர்ந்து, படுகாயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் லேசான காயங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததற்காக சம்பந்தப்பட்ட கேட் கீப்பர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.