அமெரிக்கா – இந்தியா கூட்டுச்சேர்க்கையுடன் திட்டமிடப்பட்ட ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம், தொழில்நுட்பக் குறைபாடால் தற்காலிகமாக நிறுத்தம்!
நாசாவின் புளோரிடா மையத்திலிருந்து புறப்படவிருந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம், ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மோசமான வானிலை காரணமாக தாமதமான பயணம், இப்போது தொழில்நுட்ப சிக்கலால் புதிய தேதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கலந்து கொள்கிறார்கள். 1984-ல் ராகேஷ் சர்மா பிறகு இந்தியாவைச் சேர்ந்த இரண்டாவது விண்வெளி வீரராக சுபான்ஷூ செல்லும் வரலாற்று தருணம் இது. நாசா-இஸ்ரோ ஒத்துழைப்பில் நடைபெறும் இந்த திட்டம், இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய படியாக பார்க்கப்படுகிறது.